தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா..

0
368

தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ்,

இன்று 86 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் , அதில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் தெரிவித்தார். மேலும் ஒருவர் துபாயிலிருந்து தமிழக வந்தவர் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் இதுவரை 8 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பில் தமிழகம் இரண்டாவது நிலையில்தான் உள்ளது என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here