விமான சேவையை மீண்டும் துவங்குகிறது கோ- ஏர் நிறுவனம்…

0
108

கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் தனது விமான சேவையை தொடங்க உள்ளதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளதால் ரயில், விமானம் மற்றும் தரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்னரே விமான சேவையை பல முன்னணி நிறுவனங்கள் நிறுத்தின.

இந்நிலையில் குறைந்த பட்ஜெட் விமான சேவை நிறுவனமான கோ ஏர் நிறுவனம் வரும் 15 ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு சேவையை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மே மாதம் முதல் தேதியிலிருந்து தனது சர்வதேச சேவையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு வான் போக்குவரத்து குறித்து தகவல் அளித்துள்ள முதல் நிறுவனம் கோ ஏர் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here