தலைவன் வருகிறானா?

0
1306

தலைவன் வருகிறானா?

நீ கண்டாயா?

இல்லை கண்டவர்கள் சொன்னதைக்கேட்டாயா;
ஒற்றை சொல்லில் விளக்கம் சொல்;

வெண்ணிற தந்தங்களை கொண்ட யானைகள் நதியில் குளித்து

விளையாடிடும் செல்வமிக்க நாட்டை உனக்கு தருகிறேன்.

நீ சொன்ன சொல்லை உன்னிடம் சொன்னது யார்;

என்னவர் வருகையை அறிந்தவர் யார்

சொல்

சொல்…


காதல் ஒரு கொடிய நோய்;

பிரிவு என்பது அதில் ஏற்படும் காயங்கள்;

சேர்ந்து இருந்த நாட்களை நினைவிலே கொண்டு பிரிவு நாள்கள்

நகர்கின்றன,

பிரிவு இருவருக்கும்தான் ஆனால் அதில் அதிகம் வாடுபவள்

அவளே,

முப்பொழுது அவன் எண்ணங்கள் மனதிலிலே;

அளவறியாமல் தேடிடும் கண்களும்;

ஆயிரம் முறை அடிவைத்து வந்து பார்த்திடும் வாசலும்; 

தூக்கம் கொள்ளாமல் இருந்த இரவுகள் கனவிலே கடத்திட,

இப்படி இருந்த எனக்கு நீ அளித்த செய்தி இறைவன் தந்த வரமே!!

காதலன் வருவதை யார் சொன்னது

சொல்.

சொல்..

சொல்…

எழுதி அனுப்பியவர் 

View this post on Instagram

💞 காதலுக்கு கண் இல்லை என்றார்கள், உண்மைதான் போல என்னையும் காதலித்தால் ஒருத்தி… _ காதல் எங்கே பிறக்கிறது; புறத்தோற்றத்திலா இல்லை அகத்தோற்றத்திலா; சிரிக்கும் புன்னகையிலா, கருணை கொண்ட கண்களிலா; உருகிடும் இதயத்திலா, உடலில் ஓடிடும் உதிரத்திலா… – அவள் முதலில் என்னை எங்கே பார்த்தால் தெரியுமா, ஒரு பேருந்து நிறுத்தத்திலே; நானோ கம்மெனி பேருந்துகாகவும், அவளோ கல்லூரி பேருந்துகாகவும் நிற்கும் இடம் அது… – அவள் என்னை பார்க்கும்படியே எப்போதுமே நிற்பாள், அவள் பேருந்தே முதலில் வரும் அவள் ஏற்றி அமர்ந்து பார்வையிலே களவாடி சிறை செய்வதுபோலவே பார்ப்பாள்; அப்படி பார்ப்பவளை வர்ணிக்காமல் இருக்க முடியுமா… – அவளோ வீதியில் நடந்து வந்தால் கதிரவன் பொறாமை கொள்வான் சந்திரன் பகலில் உலவி கொண்டிருக்கிறான் என்று அப்படி முகத்தோற்றம் கொண்டவள்; இரவிலே விண்மீன்கள் பிரம்மனிடம் வினவும் எங்களை போல் உள்ளவளை தரையில் ஏன் படைத்தீர்கள் என்று அவ்வளவு அழகு கொண்டவள் அவள்… – வர்ணிக்கும் போது பெண்களின் புறத்தோற்றத்தையும், ஆண்களின் அகத்தோற்றத்தையும் வர்ணிக்க வேண்டுமாம். – நானோ புகைப்பிடிப்பவர்களை கண்டால் முகம் சுழிப்பவன்; குடிப்பவர்களை கண்டால் கோபப்படுபவன்; அநியாயத்தை கண்டால் ஆக்னியாய் எரியவன்; கருணை உள்ளமும் கொண்டவன்… _ நானும் அவளை பார்த்திருக்கிறேன்.. அவள் பார்வை பல மொழி பேசும்; உதடு அசையாமலே மௌனமொழி வீசும்; முகப்பாவனைகள் எல்லாம் அதற்கு உதவும் – அதுவரையில் அவள் பெயர் எனக்கு தெரியாது, அன்றுதான் அறிந்து கொண்டேன் அவள் பெயரை!! – எப்படி என்று பார்க்கலாமா, நானோ ஊரைவிட்டு வேலை பார்க்க வந்த இடம், பசங்களோடு ரூம்மில் இருக்கிறவன்; வழக்கம்போலவே வேலை முடித்துவிட்டு வந்து இரவு உணவுக்காக வெளியில் சென்றேன்; நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டும், மனதிலே சில எண்ணங்களை கொண்டும் பயணித்தேன்.. _ அப்போது மொபைல் ரிங் செய்தது; யார் என்று தெரியவில்லை; அட்டன் செய்து; ஹலோ, ஹலோ, ஹலோ என்று சொன்னேன் பலன் ஏதும் இல்லை; பின்னர் யார் என்று கேட்டேன்; அவள் மௌனமொழியைவிட்டு வாய்த் திறத்தால்; அவள் கூறிய முதல் வார்த்தை, என் பெயர் சூர்யா என்றாள்; ஆம் அதுவே அவள் பெயர். – கதை தொடரும் – பாகம் – 1 முடிந்தது… – #storytimethread #story #mywritings #mystory #mywriting #mythoughts #storytelling #storytime #instastory #igwriters #igwritersclub #longlines #lonliness #barathikannamma

A post shared by Cj Petchimuthu (@cjpetchimuthu) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here