அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு முதல்வர் சிறப்பு பரிசு:

0
315

அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உபகரணங்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

 “மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவிகள் சேர்க்கை பெற்றனர்.

இரண்டு மாணவிகளும் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இருவருக்கும் சென்னை அருகில் உள்ள வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது.

இந்த இரண்டு மாணவிகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பினை வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக்,இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் முனைவர், மா.மதிவாணன்,இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.