மாணவியோடு திருமணம் ஆனதாக போலிச் சான்றிதழ் தயாரிப்பு : மிரட்டிய உதவி பேராசிரியர் கைது

0
781

சென்னையில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியான விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் ஐய்யப்பன்தாங்கல் சீனிவாசபுரத்தை சேர்ந்த சதிஷ் குமார்.இவருக்கு வயது 29.

ஏற்கனவே திருமணமாகி குழந்தையும் உள்ள சதீஷ்குமார் தன்னிடம் பயிலும் மாணவிக்கும், அவனுக்கும் திருமணம் ஆனது போன்ற போலியான சான்றிதழ் தயாரித்து கொண்டார். அதனை வைத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் இந்த சான்றிதழை சமூகவலைதளத்தில் பதிவிடுவேன் என ஒரு மாணவியை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து மாணவி தியாகராயநகர் துணை ஆணையரை சந்தித்து அளித்த புகாரின் பேரில் அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் உதவிப்பேராசிரியர் சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர்.

அவர் இதற்கு முன் எந்தெந்த கல்லூரிகளில் பணிபுரிந்தார், மற்ற மாணவிகளை ஏதும் இதுபோன்று மிரட்டி இருக்கிறாரா என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here