பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு : யார் இவர்?

0
89

தேசிய ஜனநயகக் கூட்டணியின் குடியரவுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், மேலும் அவர் ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் என்றும், அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்றும் இன்று பாஜக நாடாளுமன்ற குழுவிலே பேசி விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது இவை அனைத்திற்கும் பொருத்தமான திரௌபதி முர்முவை வேட்பாளராக பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி முர்மு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். முன்னதாக எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது பாஜகவும் தனது வேட்பாளரை அறிவித்திருக்கிறது. இதில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு திரௌபதி முர்முவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயர் பட்டியலில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பெயரும் சொல்லப்பட்ட நிலையில் இன்று அவரிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல துணை குடியரசுத் தலைவராக மீண்டும் வெங்கையா நாயுடுவையே தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது