விழித்து கொண்டனர் மாணவர்கள்! புத்துணர்வு பெற்ற இளந்தலைமுறை; இந்தியாவின் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தில் பதவியேற்கும் ஆர்யா ராஜேந்திரன்

0
310

திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண்ணான ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை இவர் பெறவுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக அறிவித்துள்ளது சிபிஎம் கட்சி.

ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பிஎஸ்சி கணித மாணவியான ஆர்யா, எஸ்எஃப்ஐ மாநிலக் குழுவின் உறுப்பினர். சிபிஎம் கேசவதேவ் சாலைக் கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இவர் உள்ளார். கேரளாவில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here