மாண‌வ‌ர்க‌ளை பார்த்து “கேள்வி கேளுங்க‌ள்” என்ற‌வ‌ர் த‌ன் க‌ண்க‌ளுக்கு முன் ந‌ட‌ந்த‌ எந்த‌ அநீதியையும் கேள்வி கேட்காம‌ல் க‌ட‌ந்துபோன‌து ஏன்..? ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

0
573

2002-ல் திரு. அட‌ல் பிகாரி வாஜ்பாய் பிர‌த‌ம‌ராக‌ இருந்த‌போது ஜ‌னாதியாக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் திரு. அப்துல்க‌லாம்.

அந்த‌ வ‌ருட‌ம்தான் சுத‌ந்திர‌த்திற்கு பின்னான‌ இந்தியாவின் ஆக‌க்கொடூர‌மான‌ குஜ‌ராத் க‌ல‌வ‌ர‌ம் அர‌ங்கேறிய‌து.

அந்த‌ சூழ‌லில் “பார்த்தீர்க‌ளா நாங்க‌ள் ஒரு முஸ்லீமை ஜ‌னாதிப‌தியாக‌வே ஆக்கியிருக்கிறோம்” என்று முர‌ச‌டிக்க‌ ஒருவ‌ர் தேவைப்ப‌ட்டார். க‌லாம் ப‌ய‌ன்ப‌ட்டார்.

இந்தியாவில் ஒரு முஸ்லீம் எப்படி இருக்கவேண்டும் என இந்திய இறையாண்மை வகுத்த வரையறைக்கு சரியான உதாரணம் அப்துல் கலாம்.

ஒரு அரசாங்க அலுவலகத்தில் ஒரு சராசரியான மத்தியவர்க்க குமாஸ்தாவின் மனநிலைதான் கலாமுடையதும். இந்திய இறையாண்மை கோடிட்ட இடத்தில் மறு பேச்சில்லாமல் கையெழுத்திட்டு ஊதியம் வாங்கியவர்.

கிண்டி குதிரை ரேஸ் கிளப் காலரியில் உட்கார்ந்துகொண்டு ‘கமான், கமான்..’ என கத்துவார்கள். இதைத்தான் மாணவர்களிடம் இறுதிவரையில் சொல்லிக்கொண்டு சுயமுன்னேற்ற அறிவுரைகளை அள்ளி வீசினார்.

வாழ்நாள் முழுவதும் மானுட குலத்திற்கு எதிரான தொழில்நுட்பங்களை கண்மூடித்தனமாக ஆதரித்தவர். ஏவுகணைகள், அணு உலை போன்ற ஆபத்தான தொழில்நுட்பங்களை உச்சி முகர்ந்து கொண்டாடி இந்தியாவை ”ஆயுத‌ வல்லரசு” பாதையில் செலுத்தியவர்.

ஆக, அவர் வாழ்நாள் முழுவதும் செய்தது ஆயுத பூஜை. இந்த அசட்டு ஆயுத பூசைக்கு விசுவாசமாகவும் இருந்தார். இந்த விசுவாசத்திற்கு சன்மானமாக அதிபர் பதவியும் வந்தது. இன்னும் இறையாண்மைக்கு நெருக்கமாகவும், பல நேரங்களில் பூசையோடு, மவுன விரதத்தை கடைபிடித்தார்.

இந்தியாவின் ஜனாதிபதியாக 2002 முதல் 2007 வரை பதவி வகித்தார். கொந்தளிப்பான காலக்கட்டம். இந்துத்துவா எழுச்சிப்பெற்ற நேரம்…

அவர் நினைத்திருந்தால்….

● தன் சொந்த ஊர் ராமேஸ்வரம் மீனவர்களுக்காக ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லியிருக்கமுடியும்.

● ஈழப் பிரச்சினையில் குறைந்தபட்சம் தன் புருவத்தை உயர்த்தியிருக்கலாம்.

● காவேரி பிரச்சினையில் தன் அதிருப்தியை புன்முறுவலுடன் வெளிக்காட்டியிருக்கலாம்.

● இந்தியா முழுவ‌தும் த‌லைவிரித்தாடிய‌ சாதிய‌-ம‌த‌ வெறித்த‌ன‌த்தை நாக‌ரிக‌மாக‌ க‌ண்டித்திருக்க‌லாம்

● மாண‌வ‌ர்க‌ளை பார்த்து “கேள்வி கேளுங்க‌ள்..!” என்ற‌வ‌ர் த‌ன் க‌ண்க‌ளுக்குமுன் ந‌ட‌ந்த‌ எத்த‌ அநீதியையும் கேள்வி கேட்காம‌ல் க‌ட‌ந்துபோன‌து ந‌கைமுர‌ணா..?

● பீகாரில் அர‌சை க‌லைத்து எம‌ர்ஜென்சி பிற‌ப்பித்த‌து வேண்டுமானால் இவ‌ருடைய‌ சாத‌னை என்று சொல்ல‌லாமோ..?

● கோத்ரா கலவரத்தில் கொல்லப்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களுக்கு குற‌ந்த‌ப‌ட்ச‌ம் உதட்டையாவ‌து பிதுக்கியிருக்கலாம்…

ஆனால் அந்த உச்ச‌ப்ட்ச‌ பதவியில் அம‌ர்ந்துகொண்டே மவுன விரதத்தை கடைபிடித்தவ‌ர் க‌லாம்.

இறை நம்பிக்கை உள்ளவர். எளிமையானவர். ஆடம்பரத்தை வெறுக்கிறவர் என்ற அவருடைய பிம்பங்கள் ஊடகங்கள் வாயிலாக முன்னிறுத்தப்பட்டது.

இதனால் அவர் ரட்சகர் என்ற அளவுக்கு ஜாக்கி போட்டு தூக்கி நிறுத்தப்பட்டார். ஆனால் மேற்சொன்ன அவருடைய இருண்ட பக்கங்களைப் பற்றி எவரும் விமர்சிக்கவில்லை.

ஒரு வானூர்தி பொறியாள‌ரை அணு விஞ்ஞானியாக்கி, இறுதியில் வீணை வித்துவானாக்கி சிலை வைத்த‌தே இவ‌ர் வாழ்நாள் முழுவ‌தும் ஆத‌ரித்த‌ பாசிச‌ம் செய்த‌ கைமாறு.

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மித‌மிஞ்சிய‌ அளவுக்கதிகமாக நாயக வழிபாடுகள் உண்டு.

அதில் கலாமும் விதிவிலக்கல்ல…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here