நடிகை வாணி போஜனின் திடீர் முடிவு: உற்சாகத்தில் ரசிகர்கள்

0
331

னக்கு சினிமா தான் முக்கியம். வேறு யாரும் கிடையாது. நான் உஷார் ஆகி விட்டேன்” என்று தனது சமூக வலைதளங்களில் வாணி போஜன் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்த அழகான கதாநாயகிகளில் வாணி போஜனும் ஒருவர். முன்னணி நடிகைகளே வாயை பிளக்கும் அளவுக்கு கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார்.

ஆனால் சமீபகாலமாக ‘இவர் காணாமல் போய்விட்டாரோ?’ என்று எண்ணும் அளவுக்கு வாணி போஜன் சத்தம் இல்லாமல் இருந்து வந்தார். இரண்டெழுத்து கொண்ட அந்த ‘கோவா’ நடிகருடன் ‘எங்கேயும் எப்போதும்’ என வாணி போஜன் சுற்றித்திரிவதாக கூறப்பட்டது. இதனால் வாணி போஜனை இயக்குனர்கள் அணுக முடியவில்லை. பட வாய்ப்புகளும் கை மாறிப் போனது

இதையடுத்து வாணி போஜனுக்கு பலரும் அறிவுரை கூறியிருக்கிறார்கள். தனக்கான வாய்ப்புகள் குறைவதை உணர்ந்து கொண்ட வாணி போஜன், இனிமேல் சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்துவது என்று முடிவெடுத்துள்ளார். “இனி எனக்கு சினிமா தான் முக்கியம். வேறு யாரும் கிடையாது. நான் உஷார் ஆகி விட்டேன்” என்று தனது சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.

இப்போதாவது வாணி போஜனுக்கு எதார்த்தம் புரிந்த விட்டது என்றும் இனி நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்ற ஆறுதலில் அவரது ரசிகர்கள் உள்ளனர் .