முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிலம்பரசன்

0
1129

ஜி 5 நிறுவனம் தங்களுடைய ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ள 10 இணைய தொடர்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் அமீர் – வெற்றிமாறன், வசந்தபாலன், ஏ.எல் விஜய், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்கள் பலர் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் உருவாகும் இணைய தொடர்களும் அடங்கும்.

இதில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேப்பர் ராக்கெட்’ என்ற இணைய தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கே.ரேணுகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தரன் குமார் இசையமைத்துள்ள இந்த இணை தொடரின் இரண்டு பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

‘பேப்பர் ராக்கெட்’ இணைய தொடரின் இசை மற்றும் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த இணைய தொடர் வருகிற 29-ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஜி 5 நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தம் 8 பாடல்கள் கொண்ட இந்த தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதன் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெறறது.்சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிலம்பரசன்,இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர்.

பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய சிம்பு, அப்பாவுக்கு உடல் நிலை சரி இல்லாத போது உதவி செய்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் நன்றி. அதேபோல உதயநிதி ஸ்டாலினும் அவ்வப்போது என்னை தொடர்பு கொண்டு அப்பாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் அவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.