மின் மயானங்களில் சிசிடிவி பொருத்தப்படும்-அரசின் புதிய திட்டம்

0
391

சென்னையில் உள்ள 140க்கும் மேற்பட்ட மின் மயானங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு  ரிப்பன் மாளிகையில் இருந்து அனைத்து மின் மயானங்களையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும் கட்டளை மையத்தை சென்னை பெருநகர மாநகரட்சி ஆணையர் ககன்தீப் சிங் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ககன்தீப் சிங் பேடி

” நேற்று இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்க பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று 16 மருத்துவ குழு மத்திய சென்னையில் வீட்டில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.

எதாவது உதவி தேவைப்பட்டால். உடனடியாக மாநகராட்சி அவசர ஊர்தி சென்று அவர்களுக்கு உதவி செய்யும்.

சென்னையில் சுமார் 140 க்கும் மேற்பட்ட மின் மாயணம் உள்ளது. மாலை நேரம் அதிக உடல் வருகிறது. அதனால் அதிக நேரம் இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மயானத்தை இயக்க முடியாது ஏனென்றால் இயந்திரத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

சென்னையில் உள்ள 140க்கும் மேற்பட்ட மயானங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு ரிப்பன் மாளிகையில் இருந்து அனைத்து மயானங்களையும் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஊரடங்கை மீறி கடைகள் திறந்து வைத்திருந்ததால் நேற்று மட்டும் அரசு விதிமுறைகளை பின்பற்றாத 50 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. 9.4.2021 அன்று முதல் இன்று வரை 1,44,46000 ஆபரதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இன்று வரை 239 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர் நந்தம் பாக்கத்தில் 69 ஆக்ஸிஜன் பெட் தயார் நிலையில் உள்ளது. அதில் கிட்டத்தட்ட முப்பது மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. நேரடியாக வருவோருக்கு படுக்கை தரப்படாது மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று மருத்துவ சீட்டு இருந்தால் மட்டுமே நந்தம்பாக்கத்தில் ஆக்சிசன் படுக்கை வழங்கப்படும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here