நம்ம பண்ணா மாவுக் கட்டு : அப்போ அவருக்கு?

0
951

நடிகர்.விஜய்சேதுபதி பட்டாக் கத்திக் கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது பெரும் சர்ச்சையாகி வருகிறது.

நடிகர் விஜய்சேதுபதி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார்.மும்பை நகரில் சினிமா படப்பிடிப்பில் இருந்த அவருக்கு நண்பர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கேக்-ஐ பரிசாக அளித்தனர்.அதனை பட்டாக் கத்திக் கொண்டு வெட்டி, பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். நடிகர்.விஜய்சேதுபதி பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டும் புகைப்படம் பேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைத்தளங்களில் வைரலாகி் வருகிறது.

சாதாரண மக்கள் அல்லது இளவட்டங்கள் இப்படி செய்தால், காவல்துறையினர் கைது, லாக்அப்பில் வைத்து அடித்து மாவுக் கட்டு போட்டு விடுவார்கள்.

ஆனால், விஜய்சேதுபதி போன்ற பிரபலங்கள் இப்படி செய்தால் காவல்துறை இதை தட்டிக் கேட்குமா? அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடிகர்.விஜய்சேதுபதி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here