தமிழகத்தில் 7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும், உயர் கல்வித் துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்..
மேலும் புதிதாக தொடங்கப்பட உள்ள கல்லூரிகள் வரும் கல்வியாண்டு (2020-2021) முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்…