67-வது தேசிய விருதுகள் விழா- சுவாரஸ்யங்கள்…

0
103

2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தலைதகர் டெல்லியில் நடைபெற்றது.

விருதுகளை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடு வழங்கினார். தமிழ்பிரிவில் நடுவராக இசையமைப்பாளர் கங்கை அமரன் செயல்பட்டார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை “நடிகர்.தனுஷ்”

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை “நடிகர்.விஜய்சேதுபதி

சிறப்பு நடுவர் விருப்பம்: “ஒத்த செருப்பு” படத்திற்காக ராதாகிருஷ்ணன் பார்திபன்.

உள்ளிட்டோருடன் நடிகர்.ரஜினிகாந்த் அவர்கள் “தாதா சாகேப் பால்கே” விருதை பெற்றுக் கொண்டார்.

பின்னர், விருது குறித்து பேசிய அவர்,  

தாதா சாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். தாதா சாகேப் பால்கே விருதை இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூருக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றியினை தெரிவிப்பதாக கூறினார்.

அத்துடன், துணை நடிகருக்கான தேசிய விருதுப் பெற்ற நடிகர்.விஜய்சேதுபதி கூறியதாவது;

“தேசிய விருது பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; இந்த விருது பெற முழுக் காரணம் சூப்பர் டீலக்ஸ் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாதான்; அவருக்கு நன்றி”

சிறந்த நடிகை “மகாநடி” என்ற தெலுங்கு படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெறுகிறார்.

சிறந்த சவுண்ட் மிக்‌ஸர்-க்கான விருதை “ஒத்த செருப்பு” – ரசூல் பூக்குட்டி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here