40 ஆயிரம் கூட இல்லன்னா எதுக்கும் டாக்டருக்கு படிக்கணும் – துரைமுருகனின் அடாவடி பேச்சு…!

0
441

40 ஆயிரம் கூட இல்லன்னா எதுக்கும் டாக்டருக்கு படிக்கணும்… திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியது சர்ச்சைக் கிளப்பியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் 227 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்கள் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. ஆனால் தனியார் கல்லூரிகளில் ஏழை மாணவர்களால் எப்படி கல்வி கட்டணம் செலுத்தி பயில முடியும் என கேள்வி எழுந்தது.

இந்த கேள்விக்கு விடை தரும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் அரசுக் கல்லூரியில் படிக்கும் நலிந்த மாணவர்களின் படிப்பு செலவுக்கு திமுக உதவுமா என்ற கேள்விக்கு வருஷத்துக்கு 40,000 ரூபாய் கூட கட்ட முடியாதவன் எதுக்கு டாக்டருக்கு படிக்கணும் என்று வழக்கமான பாணியில் அடாவடியாக கேட்டார்.

துரைமுருகனின் இத்தகைய கருத்தால் திமுகவை மூச்சாக நினைக்கும் ஏழை மக்களின் மனதில் சலசலப்பு எழுந்துள்ளது. ஒரு பக்கம் அதிமுகவை அடிமை அரசு என்று திட்டித்தீர்க்கும் திமுக கட்சியும், ஸ்டாலினும் மக்களை அடிமை போல் நினைப்பதை நாம் எப்படி ஏற்க முடியும் என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. மாணவர்களை அவமதிக்கும் விதமாக துரைமுருகன் பேசியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அதிமுக பெரிய அளவில் மக்கள் விமர்சித்து வந்தாலும், தற்போதைய நிலவரப்படி தலைமை இல்லாமலும் அதிமுக தடம் பதிக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுப்பது, டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்தது, அரசு மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கியது, அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு செலவை அரசே ஏற்று கொண்டது என மக்களின் மனதில் நன்மதிப்பை அதிமுக பெற்று வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here