3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் ஊரடங்கில் சில தளர்வுகள்…!

0
458

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் இன்றுடன் 4 நாள் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில் நாளை மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி…!

4 நாள் முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்டவை முடங்கிய நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு. சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவற்கு ஏதுவாக நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

மே 1ம் தேதி முதல் பழைய ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றி சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை காத்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்படுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here