3 மாதத்திற்கு EMI சலுகை – வங்கிகள் விளக்கம்…!

0
218

கொரோனா பாதிப்பு காரணமாக வங்கிக்கடனுக்கு அறிவிக்கப்பட்ட 3 மாத EMI சலுகை, வாடிக்கையாளர்களுக்கான கால அவகாசம் மட்டுமே என வங்கிகள் விளக்கம்…!

கொரோனா பாதிப்பு காரணமாகவே EMI கட்டுவதற்கு 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. EMI சலுகை காலக் கட்டத்திற்கான வட்டியில் கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், தள்ளுபடி ஏதும் கிடையாது என்றும் வங்கிகள் அறிவிப்பு.ஏற்கனவே உள்ள கடன் நிலுவையின் மீது, இந்த 3 மாத வட்டித் தொகை சேர்த்து வசூலிக்கப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளன.

பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு ஏற்ப, தாமாகவே 3 மாத சலுகை வழங்கப்படும். தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களுக்கு 3 மாத சலுகை, தேவையென்றால் மட்டுமே அனுமதிக்கப்படும் என வங்கிகள் கூட்டமைப்பு விளக்கம்…!

3 மாத EMI சலுகையால் புதிதாக வீடு, வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு கூடுதலாக பணச்சுமை ஏற்படும் என வங்கிகள் கூட்டமைப்பு தகவல். பழைய கடன்தாரர்களுக்கு இதனால் பெரிய அளவிலான கூடுதல் செலவு ஏதும் ஏற்படாது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here