இன்னும் ஒரிரு நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2/2A மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம்,மாதிரி வினா தாள் வெளியீடு:

0
638

இன்னும் ஒரிரு நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2/2A மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம்,மாதிரி வினா தாள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 7ம் தேதி டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அத்துடன் 2022ம் ஆண்டுக்கான அரசுப் போட்டித் தேர்வுக் குறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆண்டு அட்டவனை வெளியிடப்பட்டது.

அப்போது பேசிய பாலசந்தர், குரூப்-2/2A மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம்,மாதிரி வினா தாள் ஆகிய இரண்டும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றார்.ஆனால், 2 வாரம் ஆகியும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இன்னும் ஒரிரு நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2/2A மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம்,மாதிரி வினா தாள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்தர் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here