தமிழ் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள்: நிபந்தனைகளுடன் முழு விவரம்

0
1473

இடைப்பாடி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிக்கு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் தமிழ் ஆர்வர்களிடமிருந்தும் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் கீழ்கண்ட தலைப்புகளில் இருந்து வரவேற்கப்படுகின்றன.

இப்போட்டியில் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி, பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் தமிழ் ஆர்வமிக்க தமிழ் ஆர்வவர்கள் கலந்துக் கொள்ளலாம்.

 தலைப்புகள் – கட்டுரைப் போட்டி:

1. நிமிர்ந்த நன்னடை  

2. அக்களிக் குஞ்சொன்று கண்டேன்

3. தமிழென்று ஓர் குரல்

கவிதைப்போட்டிக்கான தலைப்புகள்

1. தமிழுக்கு அமுதென்று பேர்,

2. தமிழும் நானும்,

3. பாரதியும், தாசனும்

நிபந்தனைகள்:

1. கட்டுரைகள் மூன்று பக்கங்களுக்கு மிகாமலும், கவிதைகள் 24 வரிகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

2. கட்டுரைகள் மற்றும் கவிதைகளுடன் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் பெயர், தொடர்பு எவர் மற்றும் புலாத்தின் (Whatsapp) எண்ணையும் தவறாமல் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்,தமிழ் ஆர்வலர்கள் தங்களின் முழு முகவரியையும் குறிப்பிட வேண்டும். 

3. போட்டியில் பங்கேற்கும் நபர்கள் அனைவருக்கும் பங்கேற்ப்புப் பாராட்டும் சான்றுகள் வழங்கப்படும்.

4. பரிசுகள் பெற்ற கவிதைகள் மற்றும் கட்டுரைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

5. கட்டுரைகள் மற்றும் கவிதைகள் Scan செய்து idappaditamizhsangam@gmail.com என்ற இ.மெயில் முகவரிக்கும், 8667388566 எர்ற மொபைல் எண்ணிற்கும் அனுப்ப வேண்டும்.

6. கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி தான் சனவரி 5, 2022.

7. நடுவரின் தீர்ப்பு இறுதியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here