வங்கித்தேர்வுக்கு தயாராகுபவரா? பயன்படுத்திக்கு கொள்ளுங்கள்! தேர்வுக்கு முந்தைய பயிற்சிகளை அளிக்கும் எஸ்.பி.ஐ மற்றும் ஐ.பி.பி.எஸ்

0
900

IBPS – Institute of Banking Personnel Selection: ஐ.பி.பி.எஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் மூலம் பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகள் தங்களது நிறுவனத்தில் உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் வங்கி அலுவலர் (Probationary Officer) ஆகிய இரு பணிகளுக்குக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கின்றன.

ஐ.பி.பி.எஸ்: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மை சமூக விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கு முந்தைய பயிற்சிகளுக்கான அழைப்பு கடிதத்தை நவம்பர் முதல் வாரத்தில் தங்களுடைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. நவம்பர் 2ஆம் வாரத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்: சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி & புதுச்சேரி (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி)

இந்த வருடம் இந்த வருடம் முதல் 7885 கிளார்க் பணியிடங்களுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது

Reserve Bank of India: இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் Grade-B அலுவலர் பணிகளுக்கும் போட்டித் தேர்வு மூலமாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், வங்கி பணிகளில் பொறியியல், விவசாயம், சட்டம் மற்றும் கணினி பட்டதாரிகளுக்குப் பிரத்தியேகமாகச் சிறப்பு அலுவலர் 1828 (Specialist Officer) பணியிடங்களுக்கு தேர்வும் நடத்தப்படுகிறது, அதற்க்கான அறிவிப்பை தற்சமயம் அறிவித்துள்ளது.

SBI – State Bank Of India: எஸ்.பி.ஐ. எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மட்டும் தனக்கான பணியாளர்களை அவர்களே தனித்தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்.

எஸ்.பி.ஐ. வங்கி: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மை சமூக விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கு முந்தைய பயிற்சிகளுக்கான அழைப்பு கடிதத்தை நவம்பர் முதல் வாரத்தில் தங்களுடைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. நவம்பர் 2ஆம் வாரத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கித்தேர்வுக்கு தயாராகுபவர்கள் பிரேத்தியேகமாக பயிற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஒரு சில பிரிவுகளுக்கு சம்பத்தப்பட்ட நிறுவங்கள் அவர்களே பயிற்சியை வழங்குகிறார்கள்.

இந்த வருடம் உள்ள அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு விவரங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here