கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்: பொதுமக்களுக்காக கழிப்பறை அமைத்த CITU தொழிலாளர்கள்

0
388

மதுரை நகரின் மையப் பகுதியில் நீண்ட நெடிய காலமாக கழிப்பறை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியடித்து வருகின்றனர்.

இதுகுறித்து மக்களும், சாலையோ வியாபாரிகளும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக பொது மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், மதுரை மாநகர் CITU சங்கத்தினர் மதுரை நகரின் மையப் பகுதியில் மொபைல் டாய்லெட் எனப்படும் ஒரு கழிப்பறையை தங்கள் செலவில் அமைத்துள்ளனர்.

இச்செயலுக்காக CITU சங்கத்தினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். அத்துடன் அரசு அதிகாரிகளால் முடியாததை செய்து காட்டிய CITU சங்கத்தினர், இதுபோன்று தொடர் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென அப்பகுதி மக்களும், சிறு வியாபாரிகளும் கேட்டுக் கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here