10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை? பேக்சோ சட்டத்தில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது வழக்கு பதிவு

0
512

புதுச்சேரி: கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 10ம் வகுப்பு மாணவிக்கு புதுச்சேரி சோரப்பட்டு பகுதியை சேர்ந்த பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி கிரிக்கெட் கிளப்பில் பல முறை புகார் அளித்துள்ளார். அங்கிருந்த அதிகாரிகள் மாணவியிடம் சமாதானம் பேசி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து மாணவி காவல்துறையில் புகாரின் அளித்துள்ளார். அதன் பேரில் பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் மற்றும் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன், அவரது மகன் ரோகித் மற்றும் செயலாளர் வெங்கட் உள்ளிட்ட 5 பேர் மீது பேக்சோ சட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இதில், ரோகித் என்பவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here