ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு,தொழில் முனைவோர்களுக்கு உதவிடுவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை:

0
770

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு உதவிடுவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தில், ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், வழங்கப்பட்ட கடனுதவி, நிறுவனத்தின் நிலை, ஊரடங்கு காலத்தில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தொழில்முனைவோர்களை ஊக்குவித்தல் தொடர்பாக ஆலோசிக்கபட்டது.

இந்த கூட்டத்தில் கூட்டத்தில் ஊரக தொழில்துறை அதிகாரிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தாட்கோ மூலம் கடனுதவி வழங்கி, சிறு தொழில் துவங்க வழிவகை செய்யப்படும் எனவும்,

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு உதவிடுவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here