தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
*மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல உள்ளூர் பேருந்துகள், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயங்காது*
உணவகங்கள் பார்சல் மட்டும் அனுமதி.
பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்படும்.
வங்கிகளில் 50% பணியாளர்கள் கொண்டு இயங்கலாம்.
திருமணத்தில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி.
மே 10 ஆம் தேதி 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் நிறுவனங்களும் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.