20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போருக்கு இறுதி வாய்ப்பு

0
75

20 ஆண்டுகளாக இறுதித் தேர்வுகளில் அரியர் வைத்திருப்போருக்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.

பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த தொடர் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே அளிக்கப்பட்ட கால அவகாசங்களைத் தவரவிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரியர் வைத்திருக்கும் பாடங்களை எழுதி தேர்ச்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பினை வழங்கியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல்/மே 2020 மாதங்களில் நடைபெறும் தேர்வுகளின் போது கடந்த 20 ஆண்டுகளில் அரியர் வைத்திருப்போர் தேர்வெழுத இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா காரணமாக விடப்பட்ட தொடர் விடுமுறையினால் தேர்வு நடைபெறவில்லை. எனவே விரைவில் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழகத்தின் https:coe1annauniv.edu என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இதுவரை சிறப்பு தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here