2வது முறையாக முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனை – தொற்று பாதிப்பு இல்லை

0
79

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்  முதல்வர் நாராயணசாமி உட்பட அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் பணிபுரிவோர், பாதுகாப்பு காவலர்கள் என  74 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட அனைவருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதனிடையே புதுச்சேரியில் இன்று மேலும் 42 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. இதில் 417 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 262 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும் மாநிலத்தில் இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here