144 தடை உத்தரவினால் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவி தேவை

0
1912

இலங்கையில் ஆட்சி அமைத்த சிங்கள அரசுகள் தொடர்ச்சியாக கொண்டுவந்த இனவாத அடக்குமுறை சட்டங்கள், வன்முறைகள், இனப்படுகொலை ஆகியன இவர்கள் போராட்டத்தின் காரணமாக அமைகின்றன. 1980 களில் இருந்து 2009 வரை இப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பல்வேறு இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டது. இவ்வியக்கங்களின் கடைசி ஆயுதப் போராட்ட இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகள் 2009 இல் அழிக்கப்பட்ட பின்னர் இப் போராட்டம் மீண்டும் முழுமையான அரசியல் போராட்டமாக மாறி உள்ளது.

இந்நிலையில் பல்வேறு இடங்களுக்கு ஈழத் தமிழர்கள் இடம் பெயர்ந்து அகதிகளாக வாழ்கின்றனர். இவர்களுக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர், ஆனால் தற்போது நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு உத்தரவினால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈழத் தமிழர்கள் முகாம்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் தேவைப்படுகிறது. இங்கு சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இவர்களில் 100 குடும்பங்கள் உணவுக்கே அவதி படுவதாக தன்னார்வலர்கள் கண்டறிந்துள்ளனர் இதேபோல் பழனியில் 75 குடும்பங்களும் பெரம்பலூர் மற்றும் வெலூரில் மொத்தம் 70 குடும்பங்களும் அடிப்படை தேவைக்கு கூடப் பணமில்லாமலும் உணவில்லாமலும் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்களோ அல்லது பிற அமைப்புகளோ முன்வந்தால் மட்டுமே அவர்களின் பசியை தீர்க்க முடியும்.

தன்னார்வலர்கள் சிலர் ஒருங்கிணைந்து தங்களால் இயன்றவரை உதவிகள் செய்து வருகின்றார். மேலும் உதவிகள் தேவைபடுகிறது தொடர்புக்கு தமிழ் +91 7418822000 நிறுவனர் – தமிழகம் காப்போம் இயக்கம்

  • பி.எஸ்.ஆர் குழு அமைப்பாளர் +91 95668 67704 ஒருங்கிணைப்பாளர்கள்
  • பழனி – +91 8098768657
  • ஈரோடு – +91 9360165122
  • பெரம்பலூர் – +91 9789136881
  • வேலூர் – +91 9347308077

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here