1000 ரூபாய் நிவாரணத்தில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு? விஏஓ மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை!

0
280

கொரோனா காலத்தில் பொருளாதாரமின்றி தவிக்கும் மாற்றுதிறனாளிகளுக்கு ரூபாய் 1000 நிவாரணமாக வழங்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் சில இடங்களில் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாக புகார்கள் குவிகிறது.

சாதாரண மக்களால் கூட வெளியே செல்ல இயலவில்லை பொருளாதாரம் இல்லை மற்ற வசதிகள் இல்லை அப்படி இருக்க மாற்றுத்திறனாளிகளால் என்ன செய்ய இயலும், அவர்களுக்கு நிவாரணத்தை கொண்டு சேர்ப்பது அரசின் கடமை அல்லவா?


கிராம புறங்களில் மாற்றுத்திறானாளிகள் ரூ.1000 நிவாரணம் முறையாக வழங்கப்பட வில்லை என தென்காசி மாவட்டம் அழகுனேரி பஞ்சாயத்து குருவி குளம் ஒன்றியம் திருவேங்கடம் தாலுகாவை சேர்ந்த S.K.மாரியப்பன்.

மேலும் அவர் கூறியதாவது, அடையாள வைத்து உள்ளேன் ஆதார் கார்டு உள்ளது இன்று சரி செய்யப்ட்டது. ஆனால் பணம் நாளைக்கு வாங்க வா ஆனால் இன்று பணம் தீர்ந்து போச்சு நாளை வா என்பதும் என்னிடம் பட்டியல் இல்லை என்பதும் இருந்தால் நான் கொடுத்து விடுவேன் என கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாது, மேலும் அறிவிப்பை அறிவித்து விட்டு ஏன் அலைக்கழிக்க வேண்டும் இதற்க்கு முதல்வர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தான் பதிலளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here