வேளாண் மசோதாக்கள்: காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

0
757

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது…!

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்தார் கூறியதாவது:

காங்கிரஸ் மாபெரும் கையெழுத்து பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் ஏழைகளிடமிருந்து 2 கோடி கையெழுத்துகளைப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுபற்றிய குறிப்பாணை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும்.

இதுபற்றி மற்றொரு காங்கிரஸ் தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்ததாவது:

“வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்படும். மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மற்ற மூத்த தலைவர்கள் அந்தந்த மாநில ஆளுநர்களிடம் இதுபற்றிய குறிப்பாணையை சமர்ப்பிப்பார்கள்.”

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்கு எதிராகவும் என்றும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் கருதி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here