ஊரடகால் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நிதி நிலைமை காரணமாக, ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியம் பிடித்தமும், பாதி ஊழியம் மட்டும் வழங்குவதும் போன்ற நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
நாடுமுழுவதும் இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு 25 மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகளை அறிவித்தது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் மட்டும் புதிய தளர்வுகள் ஏதுமின்றி ஊரடங்கு தொடர்நது கொண்டு இருக்கிறது.
இந்ந நிலையில், குறைந்த பணியாளர்கள் கொண்டு் இயங்க வேண்டும், ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் போன்ற அரசின் வழிமுறைகள் படி இன்று 25 மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்பட தொடங்கின. (கல்வி நிறுவனங்களுக்கு தடை தொடரும்)
அரசுத்துறைகள் செயல்பட தொடங்கினாலும், அரசு ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற தொந்தரவு இருந்தால் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம், பணிக்கு வராவிட்டாலும் ஊதியம் உண்டு,போக்குவரத்து வசதி செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கொரோனா காலத்திலும் அவர்கள் கைவசம் உள்ளன.
ஆனால், தனியார் நிறுவன பணியாளர்களின் கதி சற்று கவலை கிடம் தான். வேலை நாட்களுக்கு மட்டும் ஊதியம், சொந்த முயற்சிலேயே நிறுவனங்களுக்கு வர வேண்டும் இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்படும் என ஏராளமான நெருக்கடிகள் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு.
ஊரடங்கால் பல தனியார் நிறுவனங்கள் மோசமான நிதி் நிலைமை சந்தித்துள்ளன.இதனால் ஏற்றுமதி-இறக்குமதி துறை, ஐ.டி துறை, தகவல் தொலை தொடர்புத்துறை, ஊடகத் துறை உட்பட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் நிலைமை சந்தேகம் தான். ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் தனியார் நிறுவனங்கள் இயங்கினாலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லாததால் ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்யும் நோக்கில் நிறுவனங்கள் உள்ளன.
ஊரடங்கால் வருமானம் இன்றி சிக்கி தவித்த தாங்கள், அதன் பின்பும் வேலையில் இருந்து நீக்கினால், குடும்பத்தினருடன் உணவின்றி தவிக்கும் சூழ்நிலை உருவாகும் என ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.