விலையில்லா ஆடு வழங்கிட கோரி கிராம பெண்கள் மனு…

0
767

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிபட்டி ஊராட்சியை சேர்ந்த கணவனை இழந்த பெண்கள் 32 இளம் விதவைகள் உட்பட 113 பேர் தமிழ்நாடு அரசின் இலவச ஆடுகள் வழங்க வழியுறுத்தியும் அதற்கான பயனாளர் தேர்வில் சேக்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவரின் குறுக்கீடு காரணமாக அனைத்து சமூகத்திலும் பயனாளர்களை தேர்வு செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி இன்று மக்கள் குறைதீர் கூட்டத்திற்க்கு வருகை தந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமம் என்பதால் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் தங்களுக்கு வந்து சேர்வதில்லை என்றும் கனவரை இழந்து குழந்தைகளுடன் அன்றாடம் வாழ்வதற்கே கஷ்டப்படும் சூழ்நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் விதவைகளான பெண்களுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினால் ஆடு மேய்த்தாவது தங்களுடைய குழந்தைகளை காப்பாற்ற மிகவும் பேருதவியாக இருக்கும் என்கிற கோரிக்கை வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here