வன்னியர் இட ஒதுக்கீடு: அரசாணை ரத்து – காரணம் இது தான்

0
742

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் துரை சுவாமி, முரளிசங்கர் அமர்வு தீர்ப்பு வழங்கியது. சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது தவறானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சென்ற ஆட்சிக் காலத்தில் முதல்வரான எடப்பாடி பழனிசாமி அரசியல் உள்நோக்கம் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் என மக்கள் சிலரும் கருத்து தெரிவித்தனர்.

பாமக கட்சியினர் ஓடும் ரயில்களை நிறுத்தி, அதன் மீது கல்லெடுத்து ஏறிந்து வன்முறையால் பெற்ற சட்டம் என்றும் அதனால் இடையிலேயே பறிப்போனதூ என்றும் நீதித்துறை சார்ந்த வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பை குலசேகரன் தலைமையிலான குழு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள இந்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையிடு செய்யவுள்ளதாக பாமக கட்சி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here