ராணுவ தளபதி எம்.எம்.நரவனே திடீர் லடாக் பயணம்

0
61

இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற 3 வது நாள் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில் இரு தரப்பிலும் எல்லையில் மிக அருகாமையில் படைகள் குவிக்கப்பட்டுள்ள சூழலில் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே திடீர் என்று லடாக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில்,சீனா ஆக்ரமித்திருந்த பிங்கர் 4 மலைத்தொடரின் சிலபகுதிகளை இரவோடு இரவாக இந்தியப் படைகள் அதிரடியாக மீட்டதையடுத்து எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் தனது படைபலத்தை அதிகரித்துள்ளது. அமைதிப் பேச்சுகளின் போது படைகளை முழுவதும் விலக்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்ட சீனா, பிங்கர் 4 முதல் 8 வரையிலான மலைத் தொடரை தனது கட்டுப்பாட்டில் வைத்து படைகளை விலக்கிக் கொள்ள மறுத்து பிடிவாதம் காட்டி வந்தது.

இந்நிலையில், இந்தியப் படையினர் பிங்கர் 4 பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பை முறியடித்து சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். சீனப் படையினர் முன்னேறி வருவதைத் தடுக்க பிங்கர் 2, பிங்கர் 3 மலைச் சிகரங்களில் இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன.டெஸ்பாங் தவுலத் எனுமிடத்தில் சீனா அதிக அளவில் படைகளைக் குவித்திருப்பதால் அதனை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

கிழக்கு லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரை எந்த வித அத்துமீறல்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய ராணுவம் தனது படைபலத்தை விரிவுபடுத்தி உள்ளது.இதனிடையே இந்தியா -சீனா ராணுவ உயரதிகாரிகளிடையே மூன்றாவது நாளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. தன்னிச்சையாக எல்லை வரையறையை மாற்றியமைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. இதனை சீனா ஏற்க மறுப்பதால் நேற்றைய பேச்சுவார்த்தையும் உடன்பாடு இல்லாமல் முடிவடைந்தது.

இந்த நிலையில் ராணுவத் தளபதி எம்.எம் நரவானே 2 நாட்கள் லடாக்கில்  பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கடந்த 29 மற்றும் 30 தேதிகளில் ஏற்பட்ட சூழலை அடுத்து எல்லைப்பகுதிகளில் நிலைமையை ஆய்வு செய்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here