ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு…!

0
19

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ கொரோனா தடுப்பூசி 300க்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டதில் 14 சதவீதம் பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ‘ஸ்புட்னிக்-வி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து ‘கிளினிக்கல் பரிசோதனையில் 3ஆம் கட்டத்துக்குச் செல்லவில்லை’ எனக் கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால் உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. தங்கள் தடுப்பூசி அனைத்து கட்ட சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்றும் ரஷ்யா அறிவித்தது. ‘ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நாட்டின் சுகாதாரத் துறை ஒப்புதலுக்கு பிறகு இந்த வாரம் பயன்பாட்டுக்கு வரும்’ என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ரஷ்ய சுகாதாரத் துறை கூறுகையில் ‘ஸ்புட்னிக்-வி’ கொரோனா தடுப்பூசி, 300க்கும் அதிகமான தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 14 சதவீதத்தினருக்கு உடல் சோர்வு, தசை வலி மற்றும் அதிக உடல் வெப்பநிலை பதிவாகியுள்ளது’ எனத் தெரிவித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால் இதுகுறித்து மருத்துவ விஞ்ஞானிகள் கருத்துக் கூறுகையில்: ரஷ்யா எல்லா வகையிலும் ஆளுமை கொண்ட நாடுதான். ஆனால் மக்கள் உயிரை காக்கும் தடுப்பூசியில் தங்கள் வலிமையை காட்ட நினைக்கக்கூடாது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் விவகாரத்தில் யார் முதலிடம் என்ற அரசியல் உலக நாடுகள் மத்தியில் தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தாமல் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தது முட்டாள்தனமான முந்திரிக்கொட்டை செயல் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here