இந்திய விமானப்படையின் பெண் போர் விமானி ஒருவர் விரையில் ரஃபேல் விமானத்தை இயக்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தப் பெண் விமானி மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கி வருகிறார். மேலும் ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்கும் அம்பாலாவின் கோல்டன் அரோஸ் படைப்பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடுமையான தேர்வு செயல்முறையைத் தொடர்ந்து ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்க அவர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது அதற்கான பயிற்சியில் உள்ளதாக தெரிவித்தார்.
முதன்முதலாக கடந்த 2018ம் ஆண்டு பறக்கும் அதிகாரி அவானி சதுர்வேதி மிக்-21 பைசன் ரக போர் விமானத்தை தனியாக இயக்கி முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தார்.
மேலும், சதுர்வேதி கடந்த ஜூலை 2016ல் போர் விமானத்தின் விமானியாக நியமிக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர். தற்போது விமானப்படையில் 10 பெண் போர் விமானிகள் மற்றும் 18 பெண் நேவிகேட்டர்கள் உள்பட 1,875 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.