மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடிக்கு 5வது இடம்: முதல் 2-இடங்களிலும் பாஜக

0
1609

நாட்டின் மிக மோசமான முதலமைச்சர் பட்டியலில் எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.சிறந்த முதலமைச்சருக்கான பட்டியலில் 19வது இடம் கிடைத்துள்ளது.

ஐ.என்.எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர்ஸ் இணைந்து மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சிறந்த முதல்வர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அம்மாநிலத்தில் 79 சதவீதம் மக்கள் பட்நாயகின் செயல்பாடுகளின் திருப்தி தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது இடத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவாலும்,மூன்றாம் இடத்தை ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகனும் பெற்றுள்ளனர். நான்வது இடத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலமைச்சர் பிராயி விஜயன் உள்ளார்.

நாட்டின் மோசமான முதலமைச்சர்கள் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் முதல் இடத்திலும், அதே கட்சியை சேர்ந்த அரியனா முதல்வர் மனோகர் லால் கட்டார் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நாட்டின் மோசமான முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தையும் பாஜக பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நம் மாநில முதல்வரான எடப்பாடி.கே. பழனிசாமி மோசமான முதல்வர் பட்டியலில் 5வது இடத்தையும், சிறந்த முதலமைச்சர் பட்டியலில் 19 இடத்தையும் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here