மோசடி புகாரில் சிக்கிய கலசலிங்கம் கல்வி குழுமம் : வெளிச்சத்துக்கு வந்த ஆனந்த் பொறியியல் கல்லூரியின் கோல்மால்…

0
13312

மறைந்த பெரும் கோடீஸ்வரரான  கலசலிங்கம் பெயரில், சென்னை அடுத்த கழிப்பட்டூரில் ஓ.எம்.ஆர் சாலையில் அமைத்துள்ளது, கலசலிங்கம் நகர். அவருடைய புதல்வர் நடத்தும் பொறியியல் கல்லூரி  தான், ஆனந்த் பொறியியல் கல்லூரி அதாவது Anand Institute Of Higher Technology.

இந்த கல்லூரி தான், 20 லட்சம் ரூபாய் மோசடி புகாரில் சிக்கி உள்ளது. அத்துடன் 140 பொறியியல் மாணவர்களின் படிப்பை வைத்து வியாபாரமும் செய்கிறது.

சென்ற 2019ஆம் கல்வியாண்டு வரை 150-க்கும் கீழ் தான் மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். இதனால், பல கோடீ ரூபாய் செலவில் கட்டப்பட்ட கல்லூரி என்ன ஆவது? என்ற நிலையில் கல்லூரி நிர்வாகம் கன்சல்டன்ட் எனப்படும் தனியார் கல்வி ஆலோசர்களை அனுகி மாணவர் சேர்கையை தீவிரப்படுத்தியது. அனைத்து மாணவர்களுக்கும் 4 ஆணடுகளும் டியூசன் கட்டணம் இல்லை என்ற இலவச கல்வி திட்டத்தை செயல்படுத்தியது.இதற்கென தயாரிக்கப்பட்ட ஒப்பந்த பத்திரத்தில் கல்லூரி முதல்வர் கையொப்பமும் ஈட்டுள்ளார். அதில், கல்லூரி செயலாளரான மருத்துவர் அறிவழகி முடிவின் பெயரில் இது நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கல்வியாளர்கள் துரிதமாக செயல்பட்டதால் கிட்டத்தட்ட புதிதாக 140 மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை சமர்பித்து கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், பல மாதங்களாக  வாயை மூடி இருந்த, ஆனந்த் கல்லூரி நிர்வாகம் கொரோனா கால இழப்பீடை சரிகட்ட  இலவச கல்வியை நம்பி வந்த ஏழை மாணவர் தலையில் கை வைத்தது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்ட பிறகு,  கல்லூரி செயலாளர் மருத்துவர் அறிவழிகி தலைமையில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில், தாங்கள் பொறியியல் படிப்பை தொடர இலவச கட்டணக் கல்வியை ரத்து செய்து, 50,00்0 ரூபாயை கல்விக் கட்டணத்தை உடனே கட்ட வேண்டும் என்று கரராக கூறியுள்ளனர்.

பணத்தை கட்டுங்கள் இல்லை படிப்பை அப்படியே நிறுத்திவிட்டு வீட்டுக்கு நடையை கட்டுங்கள் என்று கல்லூரி முதல்வர் அலட்சியமாக பேசுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கஷ்டப்பட்டு மாதக் கணக்காக அழைந்து, திரிந்து புகாரில் சிக்கிய ஆனந்த் கல்லூரியில் மாணவர்களை சேர்ந்து விட்டவர்களை கண்டுக் கொள்ளாமல் நடுத் தெருவில் விட்டனர். உரிய முறையில் போடப்பட்ட ஒப்பந்தம் படி, 20 லட்சம் ரூபாய் பணத்தையும் தராமல் பெரும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர், ஆனந்த் கல்லூரி நிர்வாகத்தினர்.

இது குறித்து கல்லூரியில் கேட்கப் போனால் கல்லூரியின் முக்கிய நிர்வாகிகள் பின்பக்க கதவு வழியாக ஓடியதாக கண்ணால் பார்த்த மாணவர்கள் கூறுகின்றனர்.140 பொறியியல் மாணவர்களின் கல்வி தற்போது கேள்வி குறியாக்கிய ஆனந்த் கல்லூரி, 20 லட்சம் ரூபாய் பணம் குறித்து கேட்டால், மிரட்டு விடுக்கும் வகையில் பேசி பாதுகாவலர்களை விட்டு  துரத்தி விடுகின்றனர்.

ஒருசில மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பயந்து 50,000 ரூபாய் கட்டணத்தை செலுத்த முன்வந்தாலும் ஏராளமான கிராமபுற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.

கல்வி வள்ளல் என்று கூறும் கலசலிங்கம் ஐயாவின் கல்லூரியில்  இப்படி மோசடி வேலை அரங்கேறி இருப்பதை அவரின் புதல்வர் ஸ்ரீதரும், மருமகள் அறிவழிகியும் கண்டுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இலவசக் பொறியியல் சேர்க்கை என்று கூறிவிட்டு, சேர்ந்த பின் மாணவர்களிடம் ஆயிரக் கணக்கில் பணத்தை செலுத்தச் சொல்லி நிர்பந்தம் செய்து மிகப் பெரிய கல்வி மோசடி என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது மட்டுமல்ல ஆண்டுதோறும், இதே போன்று பல்வேறு விதங்களில் லட்சக் கணக்கான பணம் என மொத்தம் கோடிக் கணக்கான ரொக்கப் பணம் வசூலிக்கப்படுவதாக இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here