மே தினம் ஏன்? தொழிலாளர்களை சுரண்டும் முதலாளிகள் :

0
257

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது.

இந்தியா,அமெரிக்கா,மாலத்தீவு,மலேசியா,ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மே மாதம் முதல் தேதியில் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

8-மணி நேரம் வேலை, 8-மணி நேரம் பொழுதுப்போக்கு, 8-மணி நேரம் உறக்கம் இப்படி இருந்தால் தான் மனிதன் நீண்டக்காலம் வாழ முடியும். இந்த கோட்பாட்டை கூறியது மாபெரும் பொதுவுடைமை வாதியான காரல் மார்க்ஸ்- ஆக இருந்தாலும், அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தத் தொடங்கியவர், அன்றைய ரஷ்ய நாட்டின் தலைவர் லெனின்.

மே- தினத்தை இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளை தாங்கிப் பிடிக்கும் தொழிலாளர்கள் கொண்டாடினாலும், இன்னும் அவர்களின் வாழ்க்கை நிலை உயரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 

தொழிலாளர் இன்னும் முதலாளிகளால் சுரண்ட தான் படுகிறார்கள். தொழிலாளர்களின் இரத்ததை குடிக்கும் பெரும் நிறுவனங்கள் (Corporate Industries) நம் நாட்டில் சிறப்புடன் வாழ தான் செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here