மேற்குவங்க மாநிலத்தில் இனி 8மணி நேரம் இனிப்பு கடைகள் இயங்கும் -முதல்வர் அறிவிப்பு

0
94

மேற்குவங்க மாநிலத்தில், இனிப்பு (பேக்கிரி) கடைகள் அனைத்தும் காலை 8மணி முதல் மாலை 4 வரை இயங்க அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதியளித்துள்ளார்

மேற்குவங்க மக்கள் அனைவரும் இனிப்பு ரகங்களை அதிக அஏவுலற உண்பது வழக்கம். தினசரி உணவோடும் ஏதேனும் ஒருவகை இனிப்பு பலகாரங்களை ருசிப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள். இவர்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் சிரமப்பட்டு நிலையில், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் மேற்குவங்க முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இதுவரை நண்பகல் 12மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கி வந்த பேக்கிரி கடைகள், இனி தினசரி காலை 8 முதல் மாலை 4்மணி் அதாவது 8மணி நேரம் இயங்கும் என அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.பெரிய ரக பேக்கிரி உட்பட அனைத்து சிறு,குறு இனிப்பு கடைகளும் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here