பிறக்கு போது முத்தையா, வளர்த்தவர் இட்ட பெயர் நாராயணன். வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி புறபட்ட சிறுவனின் அப்போதைய வயது வெறும் 16 தான்.
தன் பெயரை சந்திரசேகரன் என்று மாற்றிக் கொண்டு சென்னையில் வேலை தேடி அழைந்து பல்வேறு இன்னல்களுக்கும் ஆளானார். பின்னர் தன் திறமையை கவிதை, கதைகளின் வழியாக வெளிப்படுத்த தொடங்கினார்.
அப்போது நண்பர் ஒருவரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், “PROOF READER” ஆக வேலை கேட்டார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அப்போது அந்த நொடியில் அவர் மூளையில் தோன்றிய பெயரை அதிபரிடம் கூறினார்.
அவரது பெயரை ”கண்ணதாசன்” என்று பதில் கூறினார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.
கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17. கவியரசு கண்ணதாசனின் வெற்றி அத்தியாயம் தொடங்கியது இங்கிருந்து தான்.