முதல்வர் எப்போது வந்தாலும் போராட்டம் நடத்துவோம்: தூத்துக்குடி மக்கள் ஆவேசம்

0
50

தமிழக முதல்வர் தூத்துக்குடிக்கு எப்போது வந்தாலும் அறவழி போராட்டம் நடத்துவோம் – துப்பாக்கி சூட்டில் பலியான குடும்பத்தினர் தகவல்…!

தமிழக முதல்வர் வருகிற 22-ஆம் தேதி தூத்துக்குடி வரும் போது தங்களை சந்திக்க விட்டால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அறவழிப் போராட்டம் நடத்துவோம் என்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினர்.

பாதிக்கப்பட்ட உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலியானோர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கண்துடைப்புக்காக மிக்குறைந்த ஊதியமுள்ள கடைநிலை ஊழியர் பணி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்திக்க அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சண்முகநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோருடன் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முயற்சித்து வருகிறோம். ஆனால் இன்று வரை அனுமதி தரவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று இரண்டரை வருடங்கள் ஆகியும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை முதல்வர் நேரில் இதுவரை சந்திக்கவில்லை.

எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் கல்வி தகுதி அடிப்படையில் பணி ஆணை வழங்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் நினைவாக நினைவகம் அமைக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி தரவேண்டும்.
இல்லாத பட்சத்தில் தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வரும் போது அறவழி போராட்டத்தை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் நடத்தப்படும் என்று துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here