முகக்கவசம் அணியாத பக்தர்களுக்கு அபராதம் விதிப்பு:

0
58

சென்னையை அடுத்த திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கு முகக்கவசம் அணியாமல் வந்த பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவேற்காடு நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முறையாக முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது முகக்கவசம் அணியாமல் கோயிலுக்கு வந்த புதுமணத் தம்பதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அபராதம் விதித்து முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைஷர் கொண்டு கைகளை கழுவிய பின்  சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here