மின்வாரிய கேங்மேன் தேர்வு 2020

0
1217

தமிழக மின்வாரியத்தில் உருவாக்கப்பட்டுள்ள கேங்மேன் பணியாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தோ்வு நேற்று (15.03.2020) அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொள்ளும் கேங்மேன் என்ற புதிய பணியிடங்களுக்கு 5 ஆயிரம் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.Advertisement

இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பாக நிா்ணயிக்கப்பட்டிருந்தாலும், உடல்தகுதி மற்றும் எழுத்துத் தோ்வு வாயிலாக ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா் என அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்வாரிய கேங்மேன் தேர்வு தேதி:

இதையடுத்து இந்தப் பணிகளுக்கு சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். முன்னதாக, உடல் தகுதித் தோ்வு பல்வேறு கட்டங்களாக மண்டல வாரியாக நடத்தப்பட்டது. இதையடுத்து உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, எழுத்துத் தோ்வு மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறும் என மின் வாரியம் அண்மையில் அறிவித்தது. இதற்கான நுழைவு சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. இதனை www.tangedco.gov.in என்ற மின்வாரிய இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மின்வாரிய கேங்மேன் தேர்வு: 30 மையங்களில்

இந்நிலையில், கேங்மேன் பணிக்கான எழுத்துத் தோ்வு, தமிழகம் முழுவதும் சுமாா் 30 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தேர்வில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எழுதினர்.

மின்வாரிய கேங்மேன் தேர்வு முடிவுகள்:

இதற்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here