மளிகை கடைக்காரராக மாறிய திரைப்பட இயக்குநர்…!

0
142

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொருளாதார நெருக்கடி, போதிய வருமானம் இல்லாத நிலையால் மளிகை கடைக்காரராக மாறியுள்ளார் திரைப்பட இயக்குனர்…!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளார்கள். ஒருபுறம் பொருளாதார மந்த நிலை, மறுபுறம் சுகாதாரத்துறையின் எச்சரிக்கை, அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் பொது முடக்கம் என மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இதற்கு சற்றும் விதிவிலக்காக அமையவில்லை திரைத்துறை. பல துறைகளுக்கு விதிமுறைகளுடன் தளர்வு அளிக்கப்பட்டாலும் திரைத்துறைக்கு சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. திரை கலைஞர்கள் முதலமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்த பின் சின்னத்திரை படப்பிடிப்புக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. திரைப்படம் சார்ந்த தொழில்நுட்ப பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதால் பிற பிரிவு சார்ந்த தொழிலாளர்கள், கலைஞர்கள் அனைவரும் மிகவும் நலிவடைந்து உள்ளனர் என்பதே நிதர்சனமாக உண்மை.

திரைத்துறை கலைஞர்கள் நலிவடைந்ததற்கு சான்று தான் இந்த இயக்குனர். சிறிய அளவில் கதைகளை படங்களாக மாற்றி 10 ஆண்டுகளாக இயக்குனராக பணியாற்றி வருகிறார் பி.ஆனந்தன். இவர் ஊரடங்கு காரணமாக படங்களை இயக்க முடியாததாலும் தனக்கு வருமானம் கிடைக்காததாலும் சேமிப்பை பயன்படுத்தி மளிகை கடை ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

மேலும் இனி எவ்வளவு நாட்கள் இந்த ஊரடங்கு நீடிக்கும் என தெரியாது எனவும் அன்றாட செலவுகளுக்கு வருமானம் தேவைப்படுவதாலும் வேறு பிழைப்பு தேட வேண்டிய கட்டாயத்தில் திரைத்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர் என மன உளைச்சலுடன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகத்தான் மளிகைக் கடையை திறந்து பொதுமக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்களை வழங்குவதாக கூறியிருக்கிறார் பி.ஆனந்தன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here