மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 இந்திய வீரர்கள் வீரமரணம்

0
316

பயங்கரவாதிகள் தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.4 பேர் காயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையில் அமைந்துள்ள சந்தல் மாவட்டத்தில் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு ஒன்று, இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

முதலில் ஐஇடி வெடிமருந்துகள் மூலம் தாக்குதல் நடத்தியதுடன் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதிக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here