பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்

0
665

டெல்லியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கெஜ்ரிவால் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பொது இடத்தில் எச்சில் துப்புவோருக்கு அபராதங்களை விதித்து பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதை பின்பற்றி, டெல்லியில் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here