பெண் வாடிக்கையாளருக்கு, SBI ஊழியர் அனுப்பிய தகாத குறுந்தகவல்கள்:

0
283

எஸ்.பி.ஐ. கிரேட் கார்டில் பெண் ஒருவர், மற்றொருவருக்கு குறிப்பிட்ட தொகை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கொரோனா சமயத்தில் வேலை பறிபோனதால், அவர்களால் கடன் தொகையை, உரிய நேரத்தில் திரும்பச் செலுத்த இயலவில்லை.

இந்நிலையில், கடன் பெற்ற கிரேட்டின் உரிமையாளரான அப்பெண்ணுக்கு, எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் தொடர்ந்து பல முறை செல்போனில் அழைப்பு விடுத்தும், இரவு நேரங்களில் கூட தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

தான் கடன் பெறவில்லை என்றும், கடன் பெற்றவரின் பெயர், தொலைப்பேசி எண் கொடுத்தும், அப்பெண்ணுக்கு SBI வங்கி ஊழியர்கள் தொடர்ந்து செல்போன் மூலம் அடிக்கடி கால் செய்து மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

ஒருக்கட்டத்தில், செல்போன் அழைப்புகளை எடுக்க மறுத்த அப்பெண்ணுக்கு, வங்கி ஊழியர் எல்லை மீறீ மரியாதை,நாகரீகம் அற்ற முறையில் குறுந்தகவல்களை அனுப்பிக் கொண்டு் வருகின்றனர்.

சமீபக் காலமாக நிதி நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு வங்கி ஊழியர்கள் பெண்களுக்கு செல்போன் மூலம் தொந்தரவு அளித்து வரும் செயல் தொடர்ந்து வருகிறது.இதனை தடுக்க காவல்துறையினர் வழிவகை செய்ய வேண்டும் என இல்லதரசிகள் மற்றும் இளம்பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here