புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ சிறப்புக் குழு நியமனம் – தமிழக அரசு

0
247

தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவுவதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா கட்டுப்பாடுகளால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பலர் மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கு மத்திய அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநிலத்துக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று வெளிமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்புக் கொள்ளும் எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here