புது யுத்தியால் மீண்டெழுந்த P & G குரூப்ஸ்: #குட்டி ஸ்டோரி

0
805

பி அண்ட் ஜி என்ற Proctor and Gamble   நிறுனத்தை பற்றி தா இந்த குட்டி ஸ்டோரில பார்க்கப் போறோம்.

முதலில் பி அண்ட் ஜி நிறுவனத்தை பற்றி கொஞ்சம் தெரிஞ்சகலாம். பி அண்ட் ஜி நிறுவனம் 1837 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Whisper,Ariel சோப் பவுடர், Gillette, Head &Shoulders,Oral-B,Tied சோப் பவுடர் என எகப்பட்ட பொருட்களை தயாரித்து உலக முழுவதும் விற்பனை செய்யும் நிறுவனம் தான் P&G.

இந்த நிறுவனத்தின் பொருட்களை மக்கள் தங்களோட தினசரி வாழ்க்கையில் பயன்படுத்திக்கிடே தா இருப்பாங்க. அப்படிப்பட்ட பொருட்களை தொடர்ந்து தயாரித்தும், மக்களிடையே அமோக வரவேற்பும் பெற்றது.

100 ஆண்டுகளுக்கு மேல் உலக முழுவதும் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்த நிறுனத்திற்குப் போட்டியா ஹிந்துஸ்தான் யூனிலிவர், கேவின் கேர் போன்ற நிறுனங்களுக்கு போட்டிக்கு வரியில நின்னாங்க.

2000 ஆம் ஆண்டுக்கு பிறகு, Head and Shoulder-க்கு போட்டியா சில்க் சாப்பு, டைட் சோப்பு பவுடருக்கு போட்டியா ஹேன்கோ (Henko) உள்ளிட்ட பல பொருட்களும் சந்தையில் நல்ல விற்பனையாச்சு.

அப்போ P & G நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்த ஏ.ஜி.லாஃலீ  என்பவர், இதைப் பற்றி நல்லா ஆழ்ந்து சிந்திக்கிறாரு. அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர் கொண்டு வந்த புதிய திட்டம் தான் “Living it” and “Working it”.

அவர் அன்னைக்கு பயன்படுத்திய உத்திய தான், இப்போ உள்ள காப்ரெட் நிறுவனங்களும் கடைப்பிடிக்கிறதாச் சொல்லப்படுது.

Living it”-என்ன Concept-னா “நிறுனத்தோட ஊழியர்கள், நிகர்வோர் அதாவது மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று அங்கையே தங்கி, அவங்களுக்கு தேவையான பொருட்கள் என்ன? மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திறப் பொருட்கள் என்னென்ன? னு ஒரு  Complete Data-வ சேகரிக்கிறது தான் அது.

“Working it” நிறுவனத்தோட ஊழியர்கள் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை விற்கும் சூப்பர் மார்கெட் பெரிய-பெரிய கடைகள், சின்ன-சின்னக் கடைகளும் போய் வியாபாரிகள் எந்தெந்த பொருட்களை அதிகப்படியா கொள்முதல் பண்ணுறாங்க? எந்த பொருட்கள் அதிக விற்பனையாகுது என ஒவ்வொரு அசைவையும் ஊழியர்கள் சேகரிச்சாங்க.

இது எல்லாமே தான் P & G Groups வெற்றியடைய மிகப் பெரிய காரணம் மட்டுமல்ல, இன்னைக்கு இந்தியாவில் நிலைத்து நிற்கும் பெரிய நிறுனங்கள் தொடங்கி, சிறிய நிறுவனங்கள் கூட இந்த உந்தியை தான் பின்பற்றி வெற்றியடைறாங்க.

உலக முழுவதும் ஏராளமான கிளைகள், பல லட்ச கோடி ரூபாய் ஆண்டு வருமானம், லட்சக்கணக்கான நேர்முக மற்றும் மறைமுக ஊழியர்கள் என மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்து நிற்கும் நிறுவனம் தான் P & G groups.

தற்போது, P & G groups, எகப்பட்ட ஏழை  மாணவிகளுக்கு இலவச கல்வியும் அளித்து வருகிறது. பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் P & G Groups துணை நிற்கிறது.

வியாபாரத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில் ஏதும் சிக்கல் வந்தால் 

அதை புதிய சித்தனை உடன் எப்படி கையாள வேண்டும் என்பதற்கு P and G எனப்படும் Proctor and Gamble Groups ஒர் உதாரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here