புதிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த ஆஸ்கர் நாயகன்:

0
426

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பட இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன் டுவிட்டர் கணக்கில், சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ, திமுக கூட்டணிக்கு என் வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி, தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர். ரஜினிகாந்த் போன்ற திரைப் பிரபலங்கள், மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here